ஜப்பானில் ஒரே நாளில் 155 நிலநடுக்கங்கள்....

2 தை 2024 செவ்வாய் 06:17 | பார்வைகள் : 4874
ஜப்பானின் இஷிகாவா மற்றும் அதனை சுற்றியுள்ள கடற்கரை பகுதிகளில் புத்தாண்டு தினத்தன்று 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது.
இதனை தொடர்ந்து 5 மீட்டர் உயரத்திற்கு சுனாமி அலைகள் ஏற்படலாம் என்று அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Wajima கடற்கரைப் பகுதியில் திங்கட்கிழமை 1.2 மீட்டர் உயரத்திற்கு அலைகள் ஏற்பட்டதோடு, ஆங்காங்கே சிறிய அளவிலான சுனாமி அலைகள் ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கடற்கரை மற்றும் ஆற்றுப் பகுதிகளுக்கு அருகில் உள்ள மக்கள் உடனடியாக உயரமான பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
இந்நிலையில் ஜப்பானை ஒரே நாளில் 155 நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து தாக்கி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலநடுக்க பேரழிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்து இருப்பதாகவும், இன்னும் பலர் பாதிப்புகளில் சிக்கி இருக்கலாம் என்றும் ஜப்பான் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Kyodo செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலில், Wajima துறைமுக பகுதியில் உயிரிழந்த 7 பேருடன் சேர்த்து மொத்தம் 13 பேர் உயிரிழந்து இருப்பதாக தெரிவித்துள்ளது.
ஜப்பானில் தற்போது சுனாமி எச்சரிக்கைகள் திரும்ப பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஜப்பானில் நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன சாலைகளில் விரிசல் விழுந்துள்ளன, மீன் பிடி படகுகள் கடல் நீரில் மூழ்கியுள்ளன.