மீண்டும் சினிமாவில் களமிறங்குகிறாரா சீமான்...?
2 தை 2024 செவ்வாய் 08:09 | பார்வைகள் : 6255
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் மீண்டும் சினிமாவில் களமிறங்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வந்த சீமான் ‘நாம் தமிழர் கட்சி’ மூலம் அரசியலில் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில், அவர் மீண்டும் சினிமாவில் நடிகராக திரும்ப இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில், பிரதீப் ரங்கநாதனை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படம் ‘எல்.ஐ.சி.’ இந்தப் படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க, நடிகர் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்நிலையில், இந்தப் படத்தில் தமிழக அரசியல்வாதியும் நடிகரும் இயக்குநருமான சீமான் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த காலத்து அப்பா, தற்போதைய மகன் இவர்களுக்கிடையில் நடக்கும் தினசரி போராட்டத்தை மையப்படுத்திய கதையாக இது உருவாகி வருகிறதாம். விவசாயம், இயற்கை என பழமை மாறாத அப்பா கேரக்டரில்தான் சீமான் நடிக்கப் போகிறாராம். சீமானின் இரு பிள்ளைகளாக நயன்தாரா மற்றும் பிரதீப் ரங்கநாதன் இருப்பார்கள் எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்தான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கலாம்.


























Bons Plans
Annuaire
Scan