Seine-et-Marne : மின்கம்பத்தில் ஏறிய ஒருவர் படுகாயம்! - உயிராபத்து!
2 தை 2024 செவ்வாய் 10:00 | பார்வைகள் : 14685
40 வயதுடைய ஒருவர் மின்கம்பம் ஒன்றில் ஏறி, மின்சார தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். அவரது உடலில் 80% சதவீதம் எரிந்துள்ளதை அடுத்து, உயிராபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
La Grande-Paroisse (Seine-et-Marne) நகரில் இச்சம்பவம் டிசம்பர் 31 இடம்பெற்றுள்ளது. 33,000 வோல்ட் மின்சாரம் கடக்கும் கம்பிகளை தாங்கும் மிகப்பெரிய மின்கம்பம் ஒன்றில் குறித்த நபர் ஏறியுள்ளார். அவர் அதன் உச்சியை அடையும் முன்னரே மின்சார தாக்குதலுக்கு உள்ளாகினர்.
தீயணைப்பு படையினர் உலங்குவானூர்தி மூலம் Percy Clamart மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். உயிருக்காபத்தான நிலையில் அவர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

























Bons Plans
Annuaire
Scan