Rain Touch Display அம்சத்துடன் வரும் OnePlus Ace 3 மொபைல்
2 தை 2024 செவ்வாய் 09:31 | பார்வைகள் : 1781
OnePlus Ace 3 ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்படும். எனவே இந்நிறுவனம் இந்த சாதனத்தின் அம்சங்களை ஒன்றன் பின் ஒன்றாக வெளியிட்டு வருகிறது.
நிறுவனம் புதிய OnePlus Ace 3 மொபைலின் display பற்றி கூறியுள்ளது. அதன்படி, OnePlus Ace 3 மொபைல் Rain Touch Displayவைக் கொண்டிருக்கும்.
Rain Touch Display என்பது ஈரமான கைகளாலும் சாதனத்தை எளிதாகப் பயன்படுத்த முடியும். மழைத்துளிகள் விழுந்தாலும், போனின் டிஸ்ப்ளே தொடர்ந்து வேலை செய்யும்.
முன்னதாக, OnePlus Ace 3 ஆனது BOE இன் 6.78 அங்குல OLED பேனலைக் கொண்டிருக்கும் என்று நிறுவனம் கூறியது. இந்த டிஸ்ப்ளே 1.5K resolutionஐ ஆதரிக்கும். இதன் அதிகபட்ச brightnessஐ 4500 வரை அதிகரிக்கலாம்.
Displayவின் Refresh Rate 120 Hertzஆக இருக்கும். மேலே நடுவில் ஒரு punch Hole கொடுக்கப்பட்டிருக்கும், அதில் Selfie Camera இருக்கும்.
OnePlus Ace 3 ஆனது Qualcomm-ன் Snapdragon 8 Gen 2 processor மூலம் இயக்கப்படலாம். RAM 12 முதல் 16 GB வரை இருக்கலாம். இது 100Watts Charging மற்றும் 5000 mAh Batteryயைப் பெற வாய்ப்புள்ளது.
தொலைபேசியில் மூன்று பின்புற கேமரா அமைப்பு இருக்கும். selfieகளுக்காக இந்த போனில் 16 MegaPixel சென்சார் வழங்கப்படலாம். உலகளாவிய சந்தையில், இந்த சாதனம் OnePlus 12R என அறிமுகப்படுத்தப்படலாம். OnePlus 12 உடன் இணைந்து இந்த போன் இந்தியாவில் 2024 ஜனவரி 23-ஆம் திகதி வெளியிடப்படும்.
இதுவரை வெளியான தகவலின்படி, வரவிருக்கும் OnePlus ஸ்மார்ட்போன் 12GB/256GB, 16GB/512GB மற்றும் 16GB/1TB Storage பெறும். IR Blaster, InScreen Finger Print Sensor போன்ற அம்சங்களும் இருக்கும். Android 14 அடிப்படையிலான ColorOS 14-ல் தொலைபேசி இயங்கும்.
நிறுவனம் OnePlus Ace 3-ன் வடிவமைப்பை டீஸர் வீடியோ மூலம் காட்டியது. இந்த போன் ஒரு circular camera moduleலை கொண்டிருந்தது, Volume Rockers மற்றும் வலதுபுறத்தில் Power on-off key உள்ளது. இடதுபுறத்தில் ஒரு alert slider உள்ளது. போனின் மேற்புறத்தில் microphone, IR blaster மற்றும் speaker போன்ற அம்சங்கள் வீடியோவில் காணப்பட்டன.