Paristamil Navigation Paristamil advert login

2023 ஆம் ஆண்டில் பிரான்சில் அதிகம் வசூலித்த திரைப்படம்!!

2023 ஆம் ஆண்டில் பிரான்சில் அதிகம் வசூலித்த திரைப்படம்!!

2 தை 2024 செவ்வாய் 11:00 | பார்வைகள் : 3929


சென்ற 2023 ஆம் ஆண்டு பிரெஞ்சு சினிமாத்துறை இலாபகரமான ஆண்டாக அமைந்திருந்தது. 181 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை அந்த ஆண்டு பெற்றிருந்தது. 

சென்ற 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 1.9% சதவீதத்தால் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில்  Astérix et l'empire du milieu திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. அதனை 4.5 மில்லியன் பேர் பார்வையிட்டிருந்தனர். 

Alibi. com 2 எனும் திரைப்படமும் மிகப்பெரும் வெற்றியடைந்திருந்தது. அதனை 4.2 மில்லியன் பேர் பார்வையிட்டிருந்தனர். மேலும் ஏழு பிரெஞ்சு திரைப்படங்கள் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்களால் பார்வையிடப்பட்டிருந்தது. 

அதேவேளை, மூன்று அமெரிக்கத்திரைப்படங்கள் (Super Mario Bros - 7.3 மில்லியன், Barbie - 5.8 மில்லியன், Avatar: The Way of Water - 5 மில்லியன்)  ஐந்து மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைச் சந்தித்திருந்தது. 

மொத்தமாக 42 திரைப்படங்கள் ஒரு மில்லியனுக்கும் அதிமானோராலும், 16 திரைப்படங்கள் 2 மில்லியனுக்கும் அதிமானோராலும், 3 திரைப்படங்கள் (மூன்றுமே அமெரிக்க திரைப்படங்கள்) ஐந்து மில்லியனுக்கும் அதிகமானோரால் பார்வையிடப்பட்டிருந்தது. 

சென்ற ஆண்டில் பிரான்சில் அதிகளவு பார்வையாளர்களைச் சந்தித்து அதிகம் வசூலித்த திரைப்படமாக Super Mario Bros திரைப்படம் உள்ளது. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்