Seine-et-Marne : கணவரின் கண் முன்னே - 75 வயது பெண் மீது பாலியல் பலாத்காரம்!!

2 தை 2024 செவ்வாய் 13:10 | பார்வைகள் : 8264
75 வயதுடைய பெண் ஒருவர் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகியுள்ளார். நேற்று ஜனவரி 1, காலை 7 மணி அளவில் இச்சம்பவம் Ozoir-la-Ferrière (Seine-et-Marne) நகரில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நபர் ஒருவர் வீட்டின் ஜன்னல் வழியாக உள்நுழைந்து, உறங்கிக்கொண்டிருந்த குறித்த 75 வயதுடைய பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார். அப்பெண்ணின் கணவர் அருகில் உள்ள கட்டிலில் இருந்தபோதும், அவர் மாற்றுத்திறனாளி என்பதால் சம்பவத்தை தடுக்க முடியவில்லை. அவர் சத்தமிட்டு கத்தியுள்ளார். ஆனாலும் அது பலனளிக்கவில்லை.
பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுவிட்டு, அங்கிருந்த பணம் சிலவற்றை திருடிக்கொண்டு குறித்த நபர் தப்பிச் சென்றுள்ளார்.
அதன் பின்னரே காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.