காஷ்மீரில் ராணுவம், போலீஸ் இணைந்து செயல்பட அமித்ஷா உத்தரவு
2 தை 2024 செவ்வாய் 13:12 | பார்வைகள் : 2757
காஷ்மீரில் பாதுகாப்பை பலப்படுத்த போலீஸ், சிஆர்பிஎப் மற்றும் ராணுவம் இணைந்து செயல்பட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்தக்கூட்டத்தில் காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹா, ராணுவ தளபதி மனோஜ் பாண்டே, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உளவுத்துறை இயக்குநர் தாபன் தேகா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், காஷ்மீரில் பாதுகாப்பை பலப்படுத்த போலீஸ், சிஆர்பிஎப் மற்றும் துணை ராணுவத்தினர் இணைந்து செயல்பட வேண்டும். மாநில உளவுத்துறையை வலுப்படுத்துவதுடன் ஊக்கப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக டில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.