Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் வரி இலக்கம் தொடர்பில் தெளிவுப்படுத்தல்

இலங்கையில் வரி இலக்கம் தொடர்பில் தெளிவுப்படுத்தல்

2 தை 2024 செவ்வாய் 14:07 | பார்வைகள் : 4637


இலங்கையில் வரி இலக்கத்தை (TIN) பெறுவதற்கு பதிவு செய்வதன் மூலம் 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொருவரும் வருமான வரி செலுத்த வேண்டும் என்று அர்த்தமில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.

நிதியமைச்சை மேற்கோள்காட்டி இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 18 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதித்தால் மட்டுமே வரி விதிக்கப்படும் நபராக மாறுகிறார் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி முதலாம் திகதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு நபரும் நடப்புக் கணக்கொன்றை ஆரம்பிக்கும் போதும், கட்டிடத் திட்டங்களுக்கு அனுமதி பெறும்போதும், வாகன பதிவின் போதும், அனுமதிப் பத்திரம் புதுப்பிக்கும் போதும், நில உரிமை பதிவின் போதும் வரி அடையாள எண்ணை சமர்ப்பிப்பது கட்டாயமாகும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்