Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேலின் ஆளில்லா விமானத் தாக்குதல் -   ஹமாசின் முக்கிய நபர் பலி

இஸ்ரேலின் ஆளில்லா விமானத் தாக்குதல் -   ஹமாசின் முக்கிய நபர் பலி

3 தை 2024 புதன் 07:46 | பார்வைகள் : 7823


இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பின் மீது பாரிய தாக்குதல்களை நடத்தி வருகின்றது.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் ஹமாசின் பிரதித் தலைவர் சலே அல் அரோரி கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச தகவ்ல்கள் தெரிவிக்கின்றன.

பெய்ரூட்டின் தென்பகுதியில் இடம்பெற்ற ஆளில்லா விமானத் தாக்குதலில் ஹமாசின் அரசியல் பிரிவின் தலைவர்களில் ஒருவரான அரோரி உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

குறித்த தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாசின் பிரதித் தலைவர் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேயிற்கு நெருக்கமானவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

வர்த்தக‌ விளம்பரங்கள்