சுவிஸ் குடிமக்களைவிட வெளிநாட்டவர்கள் அதிகம் வாழும் சுவிஸ் நகரங்கள்...
3 தை 2024 புதன் 08:53 | பார்வைகள் : 2235
சுவிட்சர்லாந்தில் 2023ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 9 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள்.
குறிப்பாக, புலம்பெயர்தல் காரணமாக, சில சுவிஸ் நகரங்களில் வாழும் வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை சுவிஸ் குடிமக்களையே மிஞ்சிவிட்டது.
2022ஆம் ஆண்டில் மட்டும், 80,000 வெளிநாட்டவர்கள் சுவிட்சர்லாந்தில் குடியமர்ந்துள்ளார்கள்.
2023இன் புள்ளிவிவரம் இன்னமும் வெளியாகவில்லை. அது வெளியானால், அது மேலும் அதிகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2002ஆம் ஆண்டு, சுவிட்சர்லாந்துக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே தடையில்லா மக்கள் போக்குவரத்து ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்தின் மக்கள் தொகையில் எவ்வித மாற்றம் ஏற்பட்டுள்ளது.
எந்தெந்த முனிசிபாலிட்டிகளில் வெளிநாட்டவர்கள் அதிக அளவில் வாழ்கிறார்கள் என்பதையும் கண்டறிய சுவிஸ் ஊடகம் ஒன்று விளைந்தது.
அந்த ஊடகம் மேற்கொண்ட ஆய்வில், இந்த இடங்கள் வெளிநாட்டவர்களை அதிகம் கவரலாம் என எதிர்பார்க்க முடியாத இடங்களுக்கு அதிக வெளிநாட்டவர்கள் குடிபெயர்ந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் Valais மாகாணத்திலுள்ள Täsch கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளில், வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை 30 சதவிகிதத்துக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
2022ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, அக்கிராமத்தில் வாழும் மக்களில் 60.5 சதவிகிதத்தினர் வெளிநாட்டவர்கள்!
அதேபோல, Vaud மாகாணத்திலுள்ள Leysin கிராமத்தில் வாழ்பவர்களில் 57.7 சதவிகிதத்தினர் வெளிநாட்டவர்கள்.
அதைத் தொடர்ந்து ஜெனீவா மாகாணத்திலுள்ள Pregny-Chambésy பகுதியில் வாழும் 54 சதவிகிதத்தினரும், லாசேன் மாகாணத்திலுள்ள Renens கிராமத்தில் வாழும் 51 சதவிகிதத்தினரும் வெளிநாட்டவர்கள் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.