Paristamil Navigation Paristamil advert login

 எதிர்கொண்ட கடினமான பந்துவீச்சாளர் ..? டேவிட் வார்னர் 

 எதிர்கொண்ட கடினமான பந்துவீச்சாளர் ..? டேவிட் வார்னர் 

3 தை 2024 புதன் 09:49 | பார்வைகள் : 1515


ஓய்வு முடிவை அறிவித்துள்ள டேவிட் வார்னர் இதுவரை தான் எதிர்கொண்டு பந்துவீச்சாளர்களில் மிகவும் கடினமான பந்துவீச்சாளர் யார் என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக சிட்னியில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டி உடன் அவுஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் ஓய்வு பெறுவதாக அறிவித்து இருந்தார்.

மேலும் சமீபத்தில் திடீரென ஒரு நாள் போட்டி தொடர்களில் இருந்தும் ஓய்வு பெறப் போவதாக டேவிட் வார்னர் அறிவித்தது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

ஆனால் தொடர்ந்து டி20 போட்டிகளில் விளையாடுவேன் என்றும், 2025ம் ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட அழைப்பு வந்தால் நிச்சயம் விளையாடுவேன் என்றும் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய அணியின் இடது கை நட்சத்திர பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் ஓய்வு அறிவித்துள்ளதை தொடர்ந்து அவரிடம் சில கேள்விகள் எழுப்பப்பட்டது.

அதில் சுவாரஸ்சியமான கேள்விகளில் ஒன்றாக, நீங்கள் எதிர்கொண்ட பந்துவீச்சாளர்களில் மிகவும் கடினமான பந்துவீச்சாளர் யார் என்று கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்துள்ள வார்னர் சந்தேகத்திற்கு இடமில்லாமல் அது தென்னாப்பிரிக்க அணியின் டேல் ஸ்டெயின் தான் என்று பதிலளித்துள்ளார். டேவிட் வார்னர் இதுவரை 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6932 ஓட்டங்கள் குவித்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்