இலங்கையில் மகள் தாக்கியதில் தந்தை உயிரிழப்பு!

3 தை 2024 புதன் 11:29 | பார்வைகள் : 5890
காலி - வந்துரம்பை பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட மகள் தாக்கியதில் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (02) காலை குறித்த தந்தைக்கும் மகளுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அவர் தனது தந்தையை எட்டி உதைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது மகளினால் தாக்கப்பட்ட 54 வயதுடைய தந்தை உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தின் போது தாயும் வீட்டில் இருந்ததாகவும், அவரும் தனது மகளினால் தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் 22 வயதுடைய குறித்த பெண் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1