பிரித்தானியாவில் ஹென்க் புயல்.... விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
3 தை 2024 புதன் 12:15 | பார்வைகள் : 2946
பிரித்தானியாவில் ஹென்க் புயல் பாதிப்பின் போது மரம் விழுந்ததில் வாகன ஓட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பிரித்தானியவின் குளோசெஸ்டர்ஷைர்(Gloucestershire) பகுதியில் ஹென்க் புயலால்(Storm Henk) ஏற்பட்ட மோசமான வானிலையால் மரம் சாய்ந்ததில் கார் ஓட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை மாலை 3.15 மணி அளவில் மரம் சரிந்து விபத்து ஏற்பட்டு இருப்பதாக டெட்பரி(Tetbury) மற்றும் சிரன்செஸ்டர்(Cirencester)இடையே உள்ள A433 சாலைக்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு அவசர ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸும் அழைக்கப்பட்டது.
இருப்பினும் சம்பவ இடத்திலேயே 50 வயதுடைய வாகன ஓட்டி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட சாலை மூடப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வாகன ஓட்டிகள் வேறு பாதைகளை பயன்படுத்தி தங்கள் பயணங்களை தொடருமாறு குளோசெஸ்டர்ஷைர் பொலிஸ் செய்தி தொடர்பாளர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஹென்க் 2023-24 புயலில் 94 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது, அத்துடன் செவ்வாய்கிழமை நாட்டின் சில பகுதியில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது.
மேலும் மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.