Paristamil Navigation Paristamil advert login

பிரெஞ்சுக் குடியுரிமை பறிக்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட நபர்!

பிரெஞ்சுக் குடியுரிமை பறிக்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட நபர்!

3 தை 2024 புதன் 13:15 | பார்வைகள் : 7198


பிரெஞ்சு குடியுரிமை கொண்ட ஒருவரது குடியுரிமை பறிக்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.

Khassanbek Tourchaev எனும் 53 வயதுடைய ஒருவரே நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். பயங்கரவாத செயற்பாட்டி ஈடுபட்ட குற்றத்துக்காக அவரது குடியுரிமை பறிக்கப்பட்டுள்ளது. Chechnya) நாட்டைச் சேர்ந்த அவர் அங்கு இடம்பெற்ற உள்ளூர் யுத்தம் காரணமாக பிரான்சுக்குள் தஞ்சம் புகுந்து, பின்னர் குடியுரிமை பெற்றுக்கொண்டார்.

பின்னர் அடிக்கடி சிரியாவுக்குச் சென்று பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததை பிரெஞ்சு உளவுத்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

அதையடுத்து அவரது குடியுரிமை நீக்கப்பட்டுள்ளதாக இன்று ஜனவரி 3, புதன்கிழமை வெளியான வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 20 பேர் வரையானவர்கள் குடியுரிமை நீக்கப்பட்டுள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்