சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை: உச்சநீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீடு
3 தை 2024 புதன் 14:43 | பார்வைகள் : 2856
சொத்துக்குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்றம் விதித்த 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து, முன்னாள் அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவித்த வழக்கில் அமைச்சராக இருந்த பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
இருவரையும் குற்றவாளிகள் என அறிவித்ததுடன் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசத்தையும் நீதிமன்றம் வழங்கியது.
இந்நிலையில், உயர்நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து பொன்முடி மற்றும் அவரது மனைவி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.