Paristamil Navigation Paristamil advert login

இத்தாலியில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொதியில் மர்ம பொருள்

இத்தாலியில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொதியில் மர்ம பொருள்

3 தை 2024 புதன் 15:54 | பார்வைகள் : 7148


வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட 6 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான ஹசீஸ் போதைப்பொருள் ஒரு தொகுதி சீதுவ பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் இருந்தே இந்த பொதிகள் அனுப்பப்பட்டுள்ளது.

இத்தாலியில் இருந்து ஹோமாகம பிரதேசத்தில் உள்ள முகவரிக்கு அனுப்பப்பட்ட பொதியில் போதைப்பொருள் இருந்ததை சுங்க வருமான கண்காணிப்பு பிரிவினர் கண்டுபிடித்துள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர்  தெரிவித்தார்.

உணவு என தெரிவிக்கப்பட்ட அந்த பொதியில் 61 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியான 4 கிலோ 91 கிராம் ஹஷிஸ் போதைப்பொருள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்