Paristamil Navigation Paristamil advert login

வெள்ளத்தில் மூழ்கிய பா- து -கலே! - பலர் வெளியேற்றம் - மீட்புப்பணிகள் தீவிரம்!

வெள்ளத்தில் மூழ்கிய பா- து -கலே! - பலர் வெளியேற்றம் - மீட்புப்பணிகள் தீவிரம்!

3 தை 2024 புதன் 16:49 | பார்வைகள் : 4392


பா-து-கலே மாவட்டத்துக்கு தொடர்ந்தும் ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 

நேற்று இரவு பலரது வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பலர் வெளியேற்றப்பட்டு வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். 415 மீட்புப்பணிகள் நேற்று இரவு இடம்பெற்றிருந்தது. 

10,350 வீடுகளுக்கு மின் தடை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நான்கு பிரதேசங்களுக்கு குடிநீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. 

பல்வேறு பகுதிகளில் தண்ணீர் உறிஞ்சும் இராட்சத கருவிகள் நிர்மானிக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

la Canche ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், மிக விரைவில் அதன் கொள்ளளவை விட அதிக தண்ணீர் அங்கு தேங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2.08 மீற்றர் அளவு கொண்ட குறித்த ஆற்றில் தற்போது 2.06 மீற்றர் அளவு நீர்மட்டம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்