Paristamil Navigation Paristamil advert login

கட்சியை காங்கிரசுடன் இன்று இணைக்கிறார் ஷர்மிளா ?

கட்சியை காங்கிரசுடன் இன்று இணைக்கிறார் ஷர்மிளா ?

4 தை 2024 வியாழன் 03:35 | பார்வைகள் : 5008


ஓய்.எஸ்.ஆர்.தெலுங்கானா கட்சி தலைவர் ஷிர்மிளா  இன்று தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியும், தெலுங்கானாவில் ஓய்.எஸ்ஆர்., தெலுங்கானா என்ற கட்சி தலைவருமான ஷர்மிளா.48 தெலுங்கானாவில் கடந்தாண்டு (2023) நவம்பரில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தனது கட்சி போட்டியிடாது போவதில்லை எனவும் அதற்கு பதிலாக காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்கும் என  அறிவித்தார். 

இதையடுத்து தெலுங்கானாவில் காங்., பெரும்பான்மையுடன்  ஆட்சியைபிடித்தது,  பாரதிய தெலுங்கானா கட்சி  தோல்வியடைந்தது.  

இந்நிலையில்  தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைப்போவதாக  ஏற்கனவே செய்திகள்  வெளியாயின. இது ஷர்மிளா தனது ஆதரவாளர்களுடன் டில்லியில் காங். தலைவர் மல்லிகார்ஜூன கார்கேயை சந்தித்து தனது கட்சியை காங்கிரஸ் இணைக்க உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்