Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில் மீண்டும் கட்டாயமாக்கப்படும் முகக்கவசம்

அமெரிக்காவில் மீண்டும் கட்டாயமாக்கப்படும் முகக்கவசம்

4 தை 2024 வியாழன் 09:42 | பார்வைகள் : 6318


அமெரிக்காவிலுள்ள வைத்திய சாலைகளில்  கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்வடைந்துள்ளது.

சளி மற்றும் சுவாச நோய்கள் பரவுவதைத் தடுக்கும் விதமாக பொதுமக்கள் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதன்படி கலிபோர்னியா, நியூயோர்க் மற்றும் இல்லினோய்ஸ் ஆகிய மாநிலங்களில் உள்ள வைத்திய சாலைகளினாலேயே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 17-23 வரையான காலப்பகுதியில், அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 29,000 கொவிட் நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 

இந்நிலையில் இந்த எண்ணிக்கை இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது 16% அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.   

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்