ஜப்பானில் புகையிரதத்தில் கத்திக்குத்து தாக்குதல்

4 தை 2024 வியாழன் 09:46 | பார்வைகள் : 7084
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் யமனொட்டேயில் புகையிரதத்தில் பயணிகள் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு கூரான கத்தியால் தாக்குதலை மேற்கொண்ட பெண்ணொருவரை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.
ஒக்காசிமாச்சி அகிகபரா புகையிரத நிலையங்களிற்கு இடையில் பயணித்துக்கொண்டிருந்த புகையிரத்தில் பெண் ஒருவர் பயணிகளை தாக்கியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நால்வர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகளின் போது அந்த பெண் பயணிகளை கொலைசெய்யமுயன்றதாக தெரிவித்துள்ளார்.
நான் அவர்களை கொலைசெய்யும் நோக்கத்துடனேயே கத்தியால்குத்தினேன் என அந்த பெண் தெரிவித்துள்ளார்.
15 சென்டிமீற்றர் நீளமான கத்தியால் அவர் பயணிகளை தாக்கினார்அவரிடமிருந்து மேலும்ஒரு கத்தியையும்பொலிஸார் மீட்டுள்ளனர்.