Paristamil Navigation Paristamil advert login

லூவர் காட்சியத்தின் பார்வையாளர் எண்ணிக்கை அதிகரிப்பு!

லூவர் காட்சியத்தின் பார்வையாளர் எண்ணிக்கை அதிகரிப்பு!

4 தை 2024 வியாழன் 10:09 | பார்வைகள் : 1878


லூவர் அருங்காட்சியகத்துக்கு வருகை தரும் பார்வையாளர்க்ளின் எண்ணிக்கை கணிசமாக உயர்வடைந்துள்ளது.

சென்ற 2023 ஆம் ஆண்டில் 8.9 மில்லியன் பார்வையாளர்கள் லூவரினை பார்வையிட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை சென்ற 2022 ஆம் ஆண்டை விட 14% சதவீதம் (2022 - 7.8 மில்லியன்) அதிகமாகும். 

கொவிட் 19 பரவலுக்கு முன்பாக 2019 ஆம் ஆண்டு 10.2 மில்லியன் பேர் லூவரினை பார்வையிட்டிருந்தனர். வருடம் லூவர் அருங்காட்சியகம் சந்தித்த அதிகபட்ச பார்வையாளர்கள் அதுவாகும். கிட்டத்தட்ட அந்த எண்ணிக்கை சென்ற ஆண்டு நெருங்கியிருந்தது. 

சென்ற ஆண்டில் பதிவான பார்வையாளர்களில் 32% சதவீதமானவர்கள் பிரெஞ்சு மக்கள் எனவும், மீதமானவர்கள் வெளிநாட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்