பணிபுரியும் இடங்களுக்கும் ஆயுதங்களை எடுத்து செல்லும் இஸ்ரேல் பெண்கள்
4 தை 2024 வியாழன் 12:50 | பார்வைகள் : 2732
ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம், காசா மீது முழு அளவிலான தாக்குதலை நடத்தி வருகிறது.
இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவித்துவருகின்றது.
இவ்வாறான நிலையில் இஸ்ரேல் பகுதிக்குள் ஹமாஸ் அமைப்பினர் மீண்டும் நுழைந்து தாக்குதலை நடத்தலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதனால் இஸ்ரேலில் உள்ள பெண்கள் பலர் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக ஆயுதங்களை வைக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.
இதேவேளை, பணிபுரியும் இடங்களுக்கும் பெண்கள் ஆயுதத்தை எடுத்துச் செல்கிறார்கள்.
அவர்களில் இஸ்ரேல் செய்தி தொலைக்காட்சியில் பணிபுரியும் தொகுப்பாளினி லிட்டல் ஷேமேஷும் ஒருவர்.
இவர், கடந்த செவ்வாய்க்கிழமை (02-01-2024) நேரலை ஒளிபரப்பில் தோன்றியபோது, இடுப்பில் உள்ள மைக்ரோபோனுக்குப் பக்கத்தில் துப்பாக்கியை பேண்ட்டிற்குள் மாட்டியிருந்தார்.
இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.