நியூயார்க் நகரத்தை விட்டு வெளியேறும் புலம்பெயர்ந்தோர்...
4 தை 2024 வியாழன் 13:07 | பார்வைகள் : 2737
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தை விட்டு ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் வெவ்வேறு நகரங்களுக்கு இடம்பெயர்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நியூயார்க்கிலிருந்து வெளியேறுவோரில் அதிகம் பேர் சென்றுள்ளது, Illinoisக்கு. 2,369 பேர் அங்கு செல்ல விமான டிக்கெட் எடுத்துள்ளார்கள்.
அடுத்தபடியாக, நியூயார்க்கிலேயே தாங்கள் இருந்த இடத்தைவிட்டு வேறு இடங்களுக்கு அதிகம் பேர் இடம்பெயர்ந்துள்ளார்கள்.
மூன்றாவதாக, 1,800 பேர் டெக்சாஸ் மாகாணத்துக்கு குடிபெயர்ந்துள்ளார்கள்.
அதைத் தொடர்ந்து, 1,200 பேர் ப்ளோரிடாவுக்கு குடிபெயர்ந்துள்ளார்கள்.
அடுத்தடுத்த இடங்களில், மின்னசோட்டா, கொலராடோ, ஜார்ஜியா, கலிபோர்னியா, விர்ஜினியா மற்றும் ஒஹையோ ஆகிய அமெரிக்க மாகாணக்கள் உள்ளன.
வேலை வாய்ப்புகள் முதலான விடயங்களுக்காக அவர்கள் இப்படி நியூயார்க்கிலிருந்து வெவ்வேறு இடங்களுக்கு குடிபெயர்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.