Paristamil Navigation Paristamil advert login

  ஜேர்மன் குடிமக்களை லெபனான் நாட்டைவிட்டு  வெளியேறுமாறு உத்தரவு

  ஜேர்மன் குடிமக்களை லெபனான் நாட்டைவிட்டு  வெளியேறுமாறு உத்தரவு

4 தை 2024 வியாழன் 13:25 | பார்வைகள் : 3260


லெபனான் நாட்டிலிருக்கும் ஜேர்மனி குடிமக்கள் அனைவரையும் அந்நாட்டை விட்டு விரைவாக வெளியேறுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் போர் லெபனானுக்கும் பரவலாம் என்ற அச்சம் தற்பொழுது உலக நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ளதுஃ

ஜேர்மனி, லெபனான் நாட்டிலிருக்கும் தனது குடிமக்கள் அனவரையும் அந்நாட்டை விட்டு விரைவாக வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளது.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ட்ரோன் தாக்குதல் ஒன்றில் மூத்த ஹமாஸ் தலைவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதால், போர் பரவலாம் என்ற அச்சம் காரணமாகவே ஜேர்மன் மக்கள் லெபனான் நாட்டிலிருந்து வெளியேற வலியுறுத்தப்பட்டுள்ளார்கள்.

ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம் எக்ஸில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், லெபனானிலிருக்கும் அனைத்து ஜேர்மன் குடிமக்களும், நெருக்கடி நேர அரசு பதிவேட்டில் பதிவு செய்துவிட்டு, முடிந்தவரையில் விரைவாக அந்நாட்டை விட்டு வெளியேறவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே, இஸ்ரேல் ஹமாஸ் போர் தொடர்பில், ஒக்டோபர் மாதத்தில், தன் குடிமக்கள் லெபனானுக்கு செல்வதற்கு எதிராக ஜேர்மனி எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்