Paristamil Navigation Paristamil advert login

பனிப்பொழிவு!

பனிப்பொழிவு!

4 தை 2024 வியாழன் 15:09 | பார்வைகள் : 11162


இந்த வார இறுதியில் பிரான்சின் பனிப்பொழிவு பதிவாகும் என வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது.

பிரான்சின் வடமேற்கு பிராந்தியம் முழுவதும் சென்ற வாரத்தில் பலத்த மழை கொட்டித்தீர்த்திருந்தது. தற்போது இந்த வார இறுதியில் நாட்டின் பெரும்பான்மையான நகரங்களில் பனிப்பொழிவு பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சனிக்கிழமை வெப்பநிலை மிகவும் வீழ்ச்சியடையும் எனவும், ஞாயிற்றுக்கிழமை பனிப்பொழிவு பதிவாகும் எனவும்  Météo France  அறிவித்துள்ளது. குறிப்பாக கிழக்கு பிரான்சில் 0°C வரை குளிர் நிலவும் எனவும், திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் மேலும் குளிர் அதிகமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக கிழக்கு எல்லை நகரங்களில் -5°C வரை கடும் குளிரும் பனிப்பொழிவும் பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்