2035ஆம் ஆண்டுக்குள் செயற்கை சூரியனை அமைக்க சீனா முயற்சி
5 தை 2024 வெள்ளி 05:48 | பார்வைகள் : 2005
ஐரோப்பா மற்றும் அமெரிக்காவை அடுத்து தற்போது சீன அரசு செயற்கை சூரியனை (artificial sun) உருவாக்கும் முயற்ச்சியில் வேகமாக இறங்கியுள்ளது.
சீனாவின் இந்த செயற்கை சூரியன் உண்மையான சூரியனை விட 7 மடங்கு அதிக வெப்பமாக இருக்கும். 2035ஆம் ஆண்டுக்குள் அதை தயார்படுத்த சீன அரசு முயற்சி செய்து வருகிறது.
அணுக்கரு இணைவு தொழில்நுட்பத்தின் அடிப்படையில், செயற்கை சூரியனை சீன அரசு உருவாக்க உள்ளது.
தேசிய முன்னுரிமையின் அடிப்படையில் nuclear fusion தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த செயற்கை சூரியனை சீனா உருவாக்கப் போகிறது.
உலகம் முழுவதும் நிலவும் எரிசக்தி சவால்களுக்கு இந்த போலி சூரியன் சிறந்த தீர்வை வழங்கும் என்று சீனா கூறுகிறது.
சீனாவின் இந்த அணு உலை 2035-ம் ஆண்டுக்குள் தயாராகிவிடும். சீனாவின் அரசு நிறுவனமான China National Nuclear Corporation (CNNC) இந்த செயற்கை சூரியனை தயாரிக்கத் தொடங்கவுள்ளது.
அதே நேரத்தில், அமெரிக்கா உட்பட பல நாடுகளும் செயற்கை சூரியனை உருவாக்குவதில் மும்முரமாக உள்ளன.
2035ஆம் ஆண்டுக்குள் இந்தப் போலி சூரியனின் முன்மாதிரியை உருவாக்கி, 2050ஆம் ஆண்டுக்குள் பாரிய அளவிலான வணிக உற்பத்தியைத் தொடங்க சீனா திட்டமிட்டுள்ளது.
ஐரோப்பாவும் அமெரிக்காவும் இந்த திசையில் மிக வேகமாக செயல்பட்டு வரும் நிலையில், சீன அரசு இப்போது இந்தப் பகுதியில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.