12வது முறையாக டிராபியை வென்று வரலாறு படைத்த PSG
5 தை 2024 வெள்ளி 07:41 | பார்வைகள் : 1310
பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி 12வது முறையாக பிரெஞ்சு சாம்பியன் டிராபியை வென்று வரலாறு படைத்துள்ளது.
பிரெஞ்சு சாம்பியன் டிராபியின் இறுதிப் போட்டியில் பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் மற்றும் டௌலௌசே அணிகள் மோதின.
ஆட்டத்தின் 3வது நிமிடத்தில் PSGயின் லீ காங்-இன் கோல் அடித்தார். அதனைத் தொடர்ந்து, நட்சத்திர வீரர் கைலியன் எம்பாப்பே 44வது நிமிடத்தில் வெற்றிக்கான கோலை அடித்தார்.
அதாவது, இரண்டாம் பாதியில் இரு அணி வீரர்கள் கோல்கள் அடிக்கவில்லை. இதனால் பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் (Paris Saint-Germain) அணி 2-0 என்ற கோல் கணக்கில் டௌலௌசே (Toulouse) அணியை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் பிரெஞ்சு சாம்பியன் டிராபியை PSG அணி தட்டித் தூக்கியது. இது அந்த அணி கைப்பற்றும் 12வது கோப்பை ஆகும்.