Paristamil Navigation Paristamil advert login

பிக்பாஸில் இருந்து வெளியேறிய பூர்ணிமா...

பிக்பாஸில் இருந்து வெளியேறிய பூர்ணிமா...

5 தை 2024 வெள்ளி 07:40 | பார்வைகள் : 2130


பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் பணப்பெட்டி டாஸ்க் வைக்கப்பட்ட நிலையில் ஒரு லட்ச ரூபாய் மதிப்புடன் தொடங்கிய பணப்பெட்டியின் மதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து கொண்டே வந்தது. இந்த நிலையில் சற்று முன் வெளியான முதல் புரமோ வீடியோவில் 16 லட்ச ரூபாய் மதிப்பு என்று அறிவிக்கப்பட்ட நிலையில் போட்டியாளர் ஒருவர் அந்த பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு சக போட்டியாளார்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் தற்போது 8 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் அவர்களில் ஒருவர் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறலாம் என்ற வாய்ப்பு அளிக்கப்பட்டது. நேற்று 12 லட்சம் பணப்பெட்டியின் மதிப்பு இருந்த நிலையில் தற்போது அதன் மதிப்பு 16 லட்சம் என மாறி உள்ளது.

இதனை அடுத்து பணப்பெட்டியை எடுத்து செல்லலாமா என்று ஆழ்ந்த யோசனையில் இருந்த பூர்ணிமா 16 லட்சம் என்றவுடன் உடனே பணப்பெட்டியை எடுக்க முடிவு செய்துவிட்டார். நான் பணப்பெட்டியை எடுத்து கிளம்புகிறேன் என்று பூர்ணிமா அறிவித்த நிலையில் அவர் மற்ற போட்டியாளர்களிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து கிளம்புவதற்கு முன் அவர் சக போட்டியாளர்களிடம் பேசியபோது ’முதலில் நான் உங்களை இதுநாள் வரை அட்டாக் செய்வதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என அனைவர் முன்னிலையிலும் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இதையடுத்து ‘காசு மேல காசு வந்து’ என்ற பாடலுக்கு நடனமாடி மாயாவுக்கு ஒரு அன்பு முத்தம் கொடுத்து பூர்ணிமா வெளியேறியதுடன் இன்றைய முதல் புரமோ முடிவுக்கு வந்துள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்