பனங்கிழங்கு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..??
5 தை 2024 வெள்ளி 07:53 | பார்வைகள் : 2530
பொங்கல் பண்டிகையொட்டி சந்தைகளில் அதிகளவில் கிடைப்பது 'பனங்கிழங்கு' ஆகும்.இந்த பனங்கிழங்கில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? தமிழ்நாட்டின் மரமான பனம் மரத்திலிருந்து கிடைக்கக்கூடிய ஒரு வகை கிழங்கு ஆகும். பனம் மரத்தில் இருந்து கிடைக்கும் பனம் பழத்தை சாப்பிட்டு அந்த கொட்டையை மண்ணில் புதைத்து வைத்தால், அதிலிருந்து பனங்கிழங்கு கிடைக்கும். குறிப்பாக இந்த கிழங்கை, பொங்கல் பண்டிகை முன்னிட்டு தான் அறுவடை செய்வார்கள்.
எண்ணற்ற நன்மைகள் நிறைந்த இந்த பனங்கிழங்கை நாம் அடிக்கடி சாப்பிடு வந்தால், ஏராளமான நன்மைகளை நாம் பெறலாம். எனவே, இத்தொகுப்பில் நாம் பனங்கிழங்கு சாப்பிட்டால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
பொட்டாசியம், வைட்டமின் பி1, பி2, பி3 மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. நார்ச்சத்து, கால்சியம் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன.
பனங்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது சரியான செரிமானத்தை உறுதி செய்கிறது.
நார்ச்சத்து அதிகம் இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து இரத்த சோகை பிரச்சனையை குறைக்கிறது.
பனங்கிழங்கில் கால்சியம் அதிகம் இருப்பதால் மூட்டு வலி மற்றும் முழங்கால் வலியைக் குறைக்க உதவுகிறது. எலும்புகளை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் ஆக்குகிறது. நார்ச்சத்து இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவையும் சர்க்கரை அளவையும் குறைக்கிறது.
மெக்னீசியம் நிறைந்திருப்பதால் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும். இதயம் தொடர்பான பிரச்சனைகளை குறைக்கிறது. அத்துடன் நரம்பு பலவீனம், நரம்புகளில் உள்ள அடைப்புகளையும் நீக்குகிறது. நரம்பு சம்பந்தமான பிரச்சனைகளை குறைக்கிறது.
இதில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடலில் உள்ள பாதுகாப்பான வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. எனவே, பனங்கிழங்கு சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
பெருங்குடலில் அசுத்தங்கள் சேராமல் தடுக்கிறது. நச்சுக்களை நீக்குகிறது. பனங்கிழங்கில், கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவாக இருப்பதால் சர்க்கரை நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்..
மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. பசியை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு இருப்பதால், அதிகமாக சாப்பிடுவது குறையும். இதன் விளைவாக எடை இழப்பு. இது உடலை ரிலாக்ஸ் செய்வது மட்டுமின்றி வாய் அழற்சியையும் குறைக்கிறது.