Paristamil Navigation Paristamil advert login

இனிவரும் காலங்களில் 'Carrefour' விலையுயர்ந்த பெருட்களை விற்கமாட்டாது.

இனிவரும் காலங்களில் 'Carrefour' விலையுயர்ந்த பெருட்களை விற்கமாட்டாது.

5 தை 2024 வெள்ளி 07:59 | பார்வைகள் : 4873


பிரான்ஸ் முழுவதும் நிலவிவரும் பணவீக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இதற்காக அரசு பல நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி பொருட்களின் விலைகளை குறைத்து வருகிறது. எப்படி இருந்தாலும் உக்ரைன் போருக்கு முன்னரான நிலைக்கு வரவில்லை என்றே கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் 'Carrefour' பல்பொருள் அங்காடிகள், இனிவரும் காலங்களில் விலையுயர்ந்த தயாரிப்பு நிறுவனங்களின் பொருட்கள், நுகர்வோர் வாங்கும் வசதிகள் இல்லாத நிலையில், அவற்ரை தங்கள் அங்காடிகளில் விற்பதில்லை எனும் முடிவை எடுத்துள்ளன.

 

Pepsico குழுமம் தன் தயாரிப்புக்களை விலை உயர்த்த முற்பட்டுள்ளதால் 'carrefour' நிறுவனம் அவர்களின் தயாரிப்புக்களான Pepsi, Lipton, 7 Up, Lay's, Doritos, Bénénuts மற்றும் Quaker ஆகிய பொருட்களை விற்பனை செய்வதில்லை என அறிவித்துள்ளது.

 

ஜனவரி 4 வியாழன் முதல், இந்த முடிவை நுகர்வோருக்கு தெரிவிக்க 'Carrefour' அதன் அங்காடிகளில் ஒரு சுவரொட்டியை வைத்துள்ளது அதில், "ஏற்றுக்கொள்ள முடியாத விலை உயர்வு காரணமாக இந்த பிராண்டை இனி விற்பனை செய்ய மாட்டோம். ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிக்கவும்" ( Nous ne vendons plus cette marque pour cause de hausse de prix inacceptable. Veuillez nous excuser pour la gêne occasionnée".) என எழுதப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்