ஈராக்கில் அமெரிக்கா விமானதாக்குதல் - ஈரான் சார்பு குழுவின் தளபதி பலி
5 தை 2024 வெள்ளி 09:54 | பார்வைகள் : 9513
ஈராக்கில் அமெரிக்கா விமானதாக்குதலை மேற்கொண்டது.
இந்த தாக்குதலை ஈரான் சார்பு ஆயுதகுழுவின் தளபதியொருவர் கொல்லப்பட்டுள்ளார்.
மத்தியகிழக்கில் உள்ள அமெரிக்க தளங்களின் மீது தாக்குதலை மேற்கொள்ளும் குழுவின் தளபதியே அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.
பக்தாத்தில் உள்ள ஈரான் சார்பு குழுவின் தலைமையகத்தில் உள்ள வாகனங்கள் திருத்துமிடத்திற்குள் இவர் தனது காருடன் நுழைய முயன்றவேளை இடம்பெற்ற தாக்குதலில் இவர் கொல்லப்பட்டுள்ளார்.
ஹரக்கட் அல் நுஜாபா என்ற அமைப்பின் தலைவர் முஸ்தாக் அல் ஜவாரி என்பவரே கொல்லப்பட்டுள்ளார்.
சிரியா ஈராக்கில் செயற்படும் இந்த அமைப்பு ஈரானிற்கு விசுவாசமானது.
ஜவாரிஅமெரிக்காவிற்கு எதிரான தாக்குதல்களை திட்டமிட்டு வழிநடத்திவந்துள்ளார் என பென்டகன் தெரிவித்துள்ளது.


























Bons Plans
Annuaire
Scan