Paristamil Navigation Paristamil advert login

பொங்கல் ரேஸில் முந்தப் போவது யார்?

பொங்கல் ரேஸில் முந்தப் போவது யார்?

5 தை 2024 வெள்ளி 13:52 | பார்வைகள் : 7426


தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள ’கேப்டன் மில்லர்’ திரைப்படத்தோடு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக உள்ள ’அயலான்’ படம் மோதுகிறது. நேரடியாக இரண்டு படங்களும் மோதிக் கொண்டாலும் விஜய் சேதுபதி நடிப்பில் ‘மெர்ரி கிறிஸ்மஸ்’ படம் வெளியாகிறது. அருண் விஜய் நடித்துள்ள ‘மிஷன்’ திரைப்படமும் பொங்கல் ரேஸில் கலந்துகொள்கிறது.

தனுஷ் படம் என்பதால் ’கேப்டன் மில்லர்’ படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. அதேசமயம் ஃபேமிலி என்டர்டெய்னரான சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘அயலான்’ திரைப்படம் வெளியாவதால் அந்த படத்திற்கும் சரிபாதி வரவேற்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து ஜனங்களின் நாயகனாக இருக்கும் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘மெர்ரி கிறிஸ்மஸ்’ படத்துக்கும் ஆதரவு இருக்கும் என்பதால் பொங்கல் ரேஸ் ரொம்பவே டஃப் இருக்கும் என்பதுதான் சினிமா விமர்சகர்களின் கருத்து.

அதேநேரத்தில் மற்ற படங்களுக்கு டிக்கெட் கிடைக்காவிட்டால் அருண் விஜய் படத்தை பார்த்துதான் வைப்போமே மூடில் ’மிஷன்’ படத்துக்கு வருபவர்களும் உண்டு என்பதால் 4 படங்களுக்கும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இருப்பினும் விமர்சன ரீதியாக எந்தப் படம் நல்ல படம் என்பது ஜனவரி 12-ம் தேதிதான் தெரியவரும்.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்