ரூ.2 கோடிக்கு ஏலம் போன தாவூத் இப்ராஹிம் சொத்துக்கள்
6 தை 2024 சனி 02:38 | பார்வைகள் : 9110
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் சொத்துக்கள் ரூ. 2 கோடிக்கு ஏலம் போனதாக தகவல் வெளியகியுள்ளது.
மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் இந்தியாவால் தேடப்பட்டு வரும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் பதுங்கி வாழ்ந்து வருகிறார்.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான ஏராளமான சொத்துக்களை மத்திய அரசு கடத்தல் மற்றும் அந்நிய செலாவணி முறைகேடு தடுப்பு சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்துள்ளது.
இந்நிலையில் ரத்னகிரி மாவட்டத்தில் தாவூத்தின் இரண்டுசொத்துக்கள் இன்று (05ம் தேதி) ஏலம் விடப்பட்டன. இதில் இரு சொத்துக்கள் முறையே ரூ. 2.01 கோடி மற்றும் ரூ. 3.28 லட்சத்திற்கு ஏலம் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக கடந்த 2020ம் ஆண்டு மும்பாகே கிராமத்தில் உள்ள தாவூத் இப்ராஹிமின் மூதாதையர்களுக்கு சொந்தமான வீடு , நிலம் உள்ளிட்ட 6 சொத்துகள் ஏலத்திற்கு வந்தது குறிப்பிடத்தக்கது. இவற்றையும் ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan