Paristamil Navigation Paristamil advert login

வட கொரியாவின்  தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் தென் கொரியா ...

வட கொரியாவின்  தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் தென் கொரியா ...

6 தை 2024 சனி 09:11 | பார்வைகள் : 6391


வட கொரியாவின் திடீர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தென் கொரியாவும் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

வட கொரியா மற்றும் தென் கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் ஏற்படும் என்ற நிலையில்,  5.1.2024 நேற்று காலை 9 மணியளவில் தென் கொரியாவிற்கு சொந்தமான யோன்பியோங் தீவுக்கு அருகில் வடகொரியா கிட்டத்தட்ட 200 ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது.

இதையடுத்து மஞ்சள் கடல் பகுதியில் உள்ள தென் கொரியாவுக்கு சொந்தமான Yeonpyeong மற்றும் Baengnyeong தீவுகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தென் கொரிய ராணுவம் எச்சரிக்கை விடுத்தது.

மேலும் தென் கொரிய எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தியதுடன், வட கொரியாவின் இந்த அத்துமீற செயலுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என்று தென் கொரியா எச்சரித்து இருந்தது.

இந்நிலையில், வட கொரியாவின் திடீர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தென் கொரியா தங்களது தீவு எல்லையில் இருந்து ஏவுகணைகளை ஏவி பதில் தாக்குதலை நடத்தியுள்ளது.

வட கொரியாவின் எல்லைக்கு அருகே உள்ள கடல் பகுதியில் இந்த தாக்குதல் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த தாக்குதல் குறித்து வட கொரியா எத்தகைய கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்