Paristamil Navigation Paristamil advert login

 உக்ரைன் இராணுவத்தின் பயங்கர தாக்குதல்...

 உக்ரைன் இராணுவத்தின் பயங்கர தாக்குதல்...

6 தை 2024 சனி 09:25 | பார்வைகள் : 7437


உக்ரைன் ரஷ்யா நாடுகளுக்கிடையேயான போர் பல மாதங்களை கடந்து இடம்பெற்று வருகின்றது.

அதாவது பெப்ரவரி 2022 இல் உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போரை தொடங்கியது.

இந்நிலையில் தற்பொழுது உக்ரைன் இராணுவம் நடத்திய நடந்த பயங்கர எறிகணை தாக்குதல்களை அடுத்து, பெல்கொரோட் நகரில் வசிக்கும் மக்களை ரஷ்யா வெளியேற்றத் தொடங்கியுள்ளது.

உக்ரைனிலிருந்து 30 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள பெல்கொரோட் நகரம் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

கடந்டத சனிக்கிழமையன்று, இந்த நகரம் மீது உக்ரைன் நடத்திய தாக்குதல்களில் 25 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல்களில் 39 பேர் கொல்லப்பட்டதாகவும் 160 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும்  தகவல் வெளியாகியுள்ளது.


 

வர்த்தக‌ விளம்பரங்கள்