வயது குறைந்த நடிகருக்கு ஜோடியாகும் கரீனா கபூர்..

6 தை 2024 சனி 09:43 | பார்வைகள் : 9198
பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூருக்கு தற்போது 43 வயதாகும் நிலையில் அவர் தன்னை விட 7 வயது குறைந்த தென்னிந்திய ஹீரோ ஒருவரின் படத்தில் நாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான யாஷ் நடிக்கும் அடுத்த திரைப்படமான ’டாக்ஸிக்’ என்ற படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் நாயகியாக நடிக்க கரீனா கபருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான கரீனா கபூர் கிட்டத்தட்ட பாலிவுட் நடிகர்கள் அனைவருக்கும் ஜோடியாக நடித்து விட்ட நிலையில் தற்போது தென்னிந்திய நடிகர் யாஷ் ஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. யாஷ் வயது 37 என்பதும், கரீனா கபூர் வயது 43 என்பதும் குறிப்பிடத்தக்கது.
’டாக்ஸிக்’ படத்தில் யாஷ் உடன் கரீனா கபூர் நடிப்பது உறுதி செய்யப்பட்டால் அவர் நடிக்கும் முதல் கன்னட படமும் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது. யாஷ் நடித்த ‘கேஜிஎப் 2’ படத்தில் ஏற்கனவே பிரபல பாலிவுட் நடிகை ரவீனா டண்டன் நடித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அவரது படத்தில் பாலிவுட் நடிகை நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1