வெளிநாட்டு பணியாளர்களினால் இலங்கைக்கு அனுப்பப்படும் பணத்தொகை அதிகரிப்பு!

6 தை 2024 சனி 10:07 | பார்வைகள் : 7216
வெளிநாட்டு பணியாளர்களினால் இலங்கைக்கு பணம் அனுப்பப்பட்ட தொகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2023 ஆம் ஆண்டில் அனுப்பப்பட்ட தொகை 57.5% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் மாத்திரம் வெளிநாட்டு பணியாளர்களினால் 567.7 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைக்கப் பெற்றுள்ளது.
இதேவேளை, 2021 ஆம் ஆண்டு குறித்த பணியாளர்களினால் அனுப்பப்பட்ட தொகை 5.5 பில்லியன் அமெரிக்க டொலராகவும் 2022 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட தொகை 3.8 பில்லியன் அமெரிக்க டொலராக பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1