மீண்டும் ரஜினி - நெல்சன் கூட்டணி?

6 தை 2024 சனி 10:10 | பார்வைகள் : 6387
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சிவராஜ்குமார் நடிப்பில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் ரிலீசானது ஜெயிலர் திரைப்படம்.போட்டிக்கு படங்கள் இல்லாமல் தனிக்காட்டு ராஜாவாக திரையரங்குகளில் வெற்றிநடை போட்ட ஜெயிலர் ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் அமைதி மற்றும் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தியிருந்த ரஜினியின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இதைத்தொடர்ந்து ஜெயிலர் படத்தின் 2ஆம் பாகத்தை எடுக்க சன் பிக்சர்ஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜெயிலர்-2 படத்தையும் நெல்சன் இயக்கவுள்ள நிலையில், அதற்கான ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகள் ஐஸ்வர்யா இயக்கிய 'லால் சலாம்' திரைப்படத்தில் நடித்து முடித்த ரஜினி, தற்போது ஞானவேல் இயக்கி வரும் தனது 170 படத்திற்கான படப்பிடிப்பில் பிசியாக உள்ளார்.
லோகேஷ் - ரஜினி கூட்டணியில் உருவாகவுள்ள தலைவர் 171 படத்தை தொடர்ந்து ஜெயிலர் -2 படப்பிடிப்பிற்கான வேலைகளை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயிலர் படத்தின் க்ளைமாக்சில் அவரது மகன் இறந்துவிடுவதாக காட்டப்பட்டிருந்த நிலையில் 2ஆம் பாகத்தில் ரஜினிக்கும் அவரது பேரனுக்கும் இடையிலான உறவை மையப்படுத்தி கதைக்களத்தை நெல்சன் உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025