Paristamil Navigation Paristamil advert login

ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை -  இலங்கை அணிக்கான சவால் 

ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை -  இலங்கை அணிக்கான சவால் 

6 தை 2024 சனி 10:18 | பார்வைகள் : 4107


ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் ஜூன் மாதம் தொடங்குகிறது. வட அமெரிக்க நாடு ஒன்றில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுவது இதுவே முதல் முறை.

இந்த உலகக்கோப்பை ஜூன் 1ஆம் திகதி ஆரம்பித்து ஜூன் 29ஆம் திகதி முடிகிறது. ஐசிசி இந்த தொடருக்கான போட்டி அட்டவணையை வெளியிட்டது. 

A, B, C, D என நான்கு பிரிவுகளாக 20 அணிகளும் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் D பிரிவில் இலங்கை அணி இடம்பெற்றுள்ளது.
இந்த பிரிவில் தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், நெதர்லாந்து மற்றும் நேபாளம் ஆகிய அணிகளும் உள்ளன. 

இலங்கை அணி, ஜூன் 3ஆம் திகதி நடக்கும் தனது முதல் போட்டியில் பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. 

அதனைத் தொடர்ந்து 7ஆம் திகதி வங்கதேசத்தையும், 11ஆம் திகதி நேபாளத்தையும், 16ஆம் திகதி நெதர்லாந்து அணியையும் இலங்கை சந்திக்கிறது.

இந்த தொடரில் சூப்பர் 8 சுற்றில் இடம்பிடிக்கும் அணிகளில், முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதும் என ஐசிசி கூறியுள்ளது.    

வர்த்தக‌ விளம்பரங்கள்