Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : கஞ்சா, கொக்கைன் போதைபொருளுடன் 15 வயது சிறுமி கைது!

பரிஸ் : கஞ்சா, கொக்கைன் போதைபொருளுடன் 15 வயது சிறுமி கைது!

7 தை 2024 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 6487


பரிஸ் 16 ஆம் வட்டாரத்தில் உள்ள Kléber மெற்றோ நிலையத்தில் வைத்து 15 வயதுடைய சிறுமி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து கொக்கைன், கஞ்சா போன்ற போதைப்பொருட்களுடன், 2700 யூரோக்கள் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன.

வெள்ளிக்கிழமை நள்ளிரவு குறித்த மெற்றோ நிலையத்தில் நின்றிருந்த போது, பயணச்சிட்டைபரிசோதனைகளை மேற்கொள்வதற்காக RATP அதிகாரிகள் அப்பெண்ணை நெருங்கியுள்ளனர். அதன்போது குறித்த சிறுமி காரணம் இல்லாமல் மிகவும் ஆக்ரோஷமாக நடந்துகொண்டதோடு, சத்தமிட்டு கத்தியும் உள்ளார். அதையடுத்து அவர் மீது சந்தேகம் கொண்ட அவர்கள், இல் து பிரான்சுக்கான பிராந்திய காவல்துறையினரை அழைத்தனர்.

விரைந்து வந்த காவல்துறையினர், குறித்த பெண்ணை விசாரணைகளுக்கு உட்படுத்தார். அதன் போது குறித்த சிறுமியின் முதுகுப்பைக்குள் போதைப்பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனனர்.

200 கிராம் கஞ்சா, 8 கிராம் கொக்கைன் போன்ற போதைப்பொருட்கள் விற்பனைக்கு தயாரான நிலையில் பொதி செய்யப்பட்டு இருந்துள்ளது. அத்துடன் 2,700 யூரோக்கள் பணமும் அவரிடம் இருந்துள்ளது.

பின்னர் அவர் கைது செய்யப்பட்டு காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார். மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்