Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் உச்சத்தை தொட்டது மரக்கறிகளின் விலை!

இலங்கையில் உச்சத்தை தொட்டது மரக்கறிகளின் விலை!

7 தை 2024 ஞாயிறு 05:39 | பார்வைகள் : 1752


இலங்கையில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.

இதன்படி, நுவரெலியா பொருளாதார வர்த்தக நிலையத்தில் இன்றைய தினம் மரக்கறிகளின் விலைகள் பின்வருமாறு பதிவாகியுள்ளன.

1 கிலோ சலாதின் விலை 1500 ரூபாயாகவும், 1 கிலோ சிவப்பு சலாதின் விலை 1700 ரூபாயாக பதிவாகியுள்ளது.

அத்துடன், 1 கிலோ மிளகாயின் விலை 800-850 ரூபாயாக பதிவாகியுள்ளது.

மேலும், கரட் 1 கிலோவின் விலை 700-750 ரூபாயாவாகவும், 1 கிலோ கோவாவின் விலை 500-550 ரூபாயாகவும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம், 1 கிலோ முள்ளங்கி 150-170 ரூபாயாகவும், 1 கிலோ பீட்ரூட் 450-500 ரூபாயாகவும், 1 கிலோ உருளைக்கிழங்கு 320-350 ரூபாயாகவும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்