Paristamil Navigation Paristamil advert login

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ. 35 ஆயிரம் கோடி முதலீடு - முகேஷ் அம்பானி

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ. 35 ஆயிரம் கோடி முதலீடு - முகேஷ் அம்பானி

7 தை 2024 ஞாயிறு 08:22 | பார்வைகள் : 2255


சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று நடைபெற்று வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ள நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. புதிய நிறுவனங்கள் தொடங்கவும், நிறுவனங்களை விரிவாக்கம் செய்யவும், முதலீடுகளை அதிகரிக்கவும் பல்வேறு நிறுவனங்கள் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.

அந்த வகையில் ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ நிறுவனம் தமிழ்நாட்டில் 35 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. 

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் காணொலி காட்சி மூலம் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், தவிர்க்க முடியாத காரணங்களால் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் என்னால் பங்கேற்க முடியவில்லை. இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்

மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, நாட்டிலேயே தொழில் நிறுவனங்களுக்கு இணக்கமான மாநிலங்களில் முன்னிலையில் உள்ளது. ஜியோ நிறுவனம் தமிழ்நாட்டில் 35 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக திகழ்கிறது. தமிழ்நாட்டில் அடுத்த வாரம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழிற்சாலை தொடங்கப்பட உள்ளது. தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது' என்றார்.  

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்