Paristamil Navigation Paristamil advert login

 ஹமாசின் கட்டமைப்பை  முற்றாக அழித்த இஸ்ரேல் 

 ஹமாசின் கட்டமைப்பை  முற்றாக அழித்த இஸ்ரேல் 

7 தை 2024 ஞாயிறு 08:35 | பார்வைகள் : 7816


இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்புக்கு இடையேயான போர் மூன்று மாதங்களை கடந்து இடம்பெற்று வருகின்றது.

ஹமாஸ் ஆட்சி செய்து வரும் காசா மீது இஸ்ரேல் மும்முனை தாக்குதல் நடத்தி வருகிறது.

முதலில் வடக்கு காசாவில் தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் ராணுவம், தற்போது மத்திய, தெற்கு காசாவிலும் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது.

இதில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் வடக்கு காசாவில் ஹமாஸ் அமைப்பின் ராணுவ கட்டமைப்புகளை முற்றிலும் அழித்து விட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறும்போது, வடக்கு பகுதியில் ஹமாசின் ராணுவ கட்டமைப்பை அழிக்கும் பணியை முடித்துவிட்டதாகவும், 

தற்போது மத்திய மற்றும் தெற்கு காசாவில் ஹமாஸ் அமைப்பை அழிப்பதில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. 

இதற்கு சில காலம் எடுக்கும் ஹமாஸ் அமைப்பினர் தளபதிகள்  இல்லாமல் செயல்பட்டு வருகிறார்கள்.

மத்திய காசா பகுதியில் உள்ள அகதிகள் முகாம்களில் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி உள்ளனர். 

தெற்கு காசாவில் கான்யூனுஸ் நகரில் பெரிய நகர்ப்புற நிலப்பரப்பில் சுரங்கப்பாதைகள் உள்ளன. 

மத்திய, தெற்கு காசாவில் ஹமாசை அழித்து ராணுவம், வேறு வழிகளில் செயல்படும். 

வடக்கு காசாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹமாஸ் அமைப்பை சேர்ந்த 8 ஆயிரம் பேர் கொல்லப் பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே தெற்கு காசாவின் கான்யூ னிஸ் நகரில் ஒரு குடியிருப்பு மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 12 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்