நயன்தாரா படத்தில் சர்ச்சை காட்சிகள்?
7 தை 2024 ஞாயிறு 12:53 | பார்வைகள் : 6722
நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான ஒரு திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக மும்பை போலீசில் அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நயன்தாரா நடித்த 75 வது திரைப்படமான ‘அன்னபூரணி’ என்ற திரைப்படம் சமீபத்தில் ரிலீஸ் ஆனது என்பதும் இந்த படம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸ் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தில் நயன்தாரா ஒரு சமையல் கலை வல்லுனராக நடித்திருந்த நிலையில் அவரை இறைச்சி சாப்பிட வைப்பதற்காக ராமர் கூட இறைச்சி சாப்பிடுவார் என்று ஜெய் கூறுவது போன்ற ஒரு காட்சி வைக்கப்பட்டுள்ளது.
இந்த காட்சிக்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் முன்னாள் சிவசேனா தலைவர் ரமேஷ் சோலான்கி என்பவர் மும்பை காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். மேலும் அந்த புகாரில் அவர் ’ஒரு அர்ச்சகரின் மகள் நமாஸ் செய்கிறார்’ என்றும் ’இந்த படத்தில் இந்து மதத்தின் புனிதங்கள் தவறாக காட்டப்பட்டுள்ளது’ என்றும் இதனை அடுத்து இயக்குனர், ’நயன்தாரா, ஜெய் மற்றும் நெட்பிளிக்ஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் புகார் அளித்து உள்ளார். இந்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan