பரிசின் பல பகுதிகளின் மின் தடை!
7 தை 2024 ஞாயிறு 15:27 | பார்வைகள் : 9818
பரிசின் பல பகுதிகளில் நேற்று சனிகிழமை இரவு மின் தடை ஏற்பட்டது. பரிஸ் 7 ஆம், 15 ஆம் மற்றும் 16 ஆம் வட்டாரங்களைச் சேர்ந்த பல பகுதிகளில் இந்த மின் தடை ஏற்பட்டிருந்தது.
கிட்டத்தட்ட 150,000 பேர் இந்த மின் தடையை சந்தித்தனர். மின் வழங்குனர்களான Enedis இது தொடர்பில் தெரிவிக்கையில், ”மின் மாற்றியில் ஏற்பட்ட பழுது காரணமாக இந்த மின் தடை ஏற்பட்டது!” என குறிப்பிட்டனர்.
உடனடியாக திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டது.
இரவு 10.30 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றது.


























Bons Plans
Annuaire
Scan