Paristamil Navigation Paristamil advert login

கிண்ணஸ் சாதனைக்காக - தீக்குச்சிகளால் கட்டப்பட்ட ஈஃபிள் கோபுரம்!

கிண்ணஸ் சாதனைக்காக - தீக்குச்சிகளால் கட்டப்பட்ட ஈஃபிள் கோபுரம்!

7 தை 2024 ஞாயிறு 17:28 | பார்வைகள் : 2902


கிண்ணஸ் சாதனை ஒன்றை நிகழ்த்தும் முயற்சியில் இந்த கோபுரம் அமைக்கும் பணி கடந்த எட்டு ஆண்டுகாலமாக இடம்பெற்றது.

Charente-Maritime நகரில் வசிக்கும் Richard Plaud எனும் நபர் ஒருவர், கடந்த எட்டு ஆண்டுகளாக செயற்பட்டு 7.20 மீற்றர் உயரம் கொண்ட ஈஃபிள் கோபுரம் ஒன்றை தீக்குச்சிகளினால் உருவாக்கியுள்ளார். இரும்பு பெண்மணி என அழைக்கப்படும் ஈஃபிள் தற்போது பொஸ்பரஸ் ஆடை அணிந்துள்ளது.

706,900 தீப்பெட்டிகளில் உள்ள குச்சிகளையும், 23 கிலோ பசையினையும் கொண்டு இந்த கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 3, 2015 ஆம் ஆண்டு ஆரம்பித்த இந்த கோபுரம் உருவாக்கும் பணி, எட்டு ஆண்டுகள் கழித்து நிறைவடைந்துள்ளது. கிண்ணஸ் சாதனையர்கள் விரைவில் இதனை பார்வையிட்டு, தங்களது கிண்ணஸ் புத்தகத்தில் இதனை இணைத்துக்கொள்வார்கள் என அறிய முடிகிறது.


 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்