Paristamil Navigation Paristamil advert login

சார்லி-எப்தோ தாக்குதலின் ஒன்பதாவது ஆண்டு நினைவு நாள்! - முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்து பங்கேற்றார்!

சார்லி-எப்தோ தாக்குதலின் ஒன்பதாவது ஆண்டு நினைவு நாள்! - முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்து பங்கேற்றார்!

7 தை 2024 ஞாயிறு 17:47 | பார்வைகள் : 2698


சார்லி-எப்த்தோ பத்திரிகை அலுவலகம் மீது ஜிகாதிப் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட கொடூர தாக்குதலின் ஒன்பதாவது ஆண்டு நினைவு தினம் ஒன்று பரிசில் நினைவுகூரப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்து, பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ உள்ளிட்ட பலர் அதில் பங்கேற்றனர். உரை எதுவும் இன்றி மிகவும் அமைதியான முறையில் இந்த அஞ்சலி நினைவேந்தல் இடம்பெற்றது.



2015 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் திகதி, காலை 11.30 மணிக்கு இந்த தாக்குதல் பரிசில் உள்ள (11 ஆம் வட்டாரத்தின் Rue Nicolas-Appert வீதியில் அமைந்திருந்த) சார்லி-எப்தோ பத்திரிகை அலுவலகத்தில் இடம்பெற்றது. அல்ஜீரியாவில் பிறந்த இரு பயங்கரவாதிகள் மேற்கொண்ட கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டனர். 11 பேர் காயமடைந்தனர்.

கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களின் நினைவாகவே இந்த அஞ்சலி நிகழ்வு இன்று இடம்பெற்றது. ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனும் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதான தனது X சமூகத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்