Paristamil Navigation Paristamil advert login

ரூ 730 கோடி ஊக்க ஊதியத்தை மறுத்த  எம்பாப்பே...!

ரூ 730 கோடி ஊக்க ஊதியத்தை மறுத்த  எம்பாப்பே...!

8 தை 2024 திங்கள் 08:30 | பார்வைகள் : 2097


பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் அணியில் இருந்து மிகவும் இணக்கமான முறையில் வெளியேறும் பொருட்டு கைலியன் எம்பாப்பே ஏற்கனவே 69 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள லாயல்டி போனஸை கைவிட ஒப்புக்கொண்டுள்ளார்.

பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் அணியின் நட்சத்திர வீரர் Kylian Mbappe-ஐ தங்கள் அணியில் இணைத்துக்கொள்ள லிவர்பூல் அணி காய்களை நகர்த்தி வருகிறது. 

இந்நிலையிலேயே கைலியன் எம்பாப்பே 69 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள லாயல்டி போனஸை கைவிட முடிவு செய்துள்ளார்.

இந்திய பண மதிப்பில் இது சுமார் 730 கோடி என்றே கூறப்படுகிறது. தற்போது 25 வயதாகும் எம்பாப்பேவின் PSG அணியுடனான ஒப்பந்தம் ஜூன் மாதம் முடிவுக்கு வருகிறது. 

ஆனால் ஒப்பந்தத்தை நீட்டிக்க PSG மறுத்துள்ளதுடன் ஆசிய நாடுகளில் முன்னெடுக்கும் போட்டிகளில் இருந்தும் எம்பாப்பே நீக்கப்பட்டார்.

இருப்பினும் அவருக்கு 80 மில்லியன் பவுண்டுகள் அளவுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்பட்டது. 

ஆனால் இந்த கோடையில் அவர் PSG அணியில் இருந்து விலகுவார் என்றால் அந்த தொகையை மொத்தமாக கைவிடவும் தயாராக உள்ளார் என கூறப்படுகிறது.

PSG அணியில் எம்பாப்பேவின் நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த லிவர்பூல் நிர்வாகம் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. 

தமது தாயாருக்கு மிகவும் பிடித்தமான அணிகளில் ஒன்று லிவர்பூல், அதனாலையே அதன் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக 2022ல் கைலியன் எம்பாப்பே வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

இதனிடையே, லிவர்பூல் அணியில் இருந்து முகமது சாலா சவுதி அணிக்கு செல்வார் என நம்பப்படும் நிலையில், அவருக்கு மாற்றாக எம்பாப்பே அந்த அணியில் இணைத்துக் கொள்ளப்படுவார் என்றே கூறப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்