Paristamil Navigation Paristamil advert login

உங்கள் செல்போனுக்கு வரும் போலி மெசேஜ்களை கண்டறியும் டிப்ஸ்....

உங்கள் செல்போனுக்கு வரும் போலி மெசேஜ்களை கண்டறியும் டிப்ஸ்....

8 தை 2024 திங்கள் 08:54 | பார்வைகள் : 1383


மோசடி நபர்களிடம் இருந்து உங்கள் செல்போனுக்கு வரும் போலி மெசேஜ்களை கண்டுபிடிப்பதற்கான டிப்ஸ் குறித்து இங்கு காண்போம்.

இந்தியாவில் நாளுக்கு நாள் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது. இது மிக எளிதான ஒன்றாக இருக்கிறது.

ஆனால் இதுதொடர்பாக பல்வேறு மோசடிகள் அரங்கேறி வருகின்றன. மோசடி நபர்கள் போலியான குறுந்தகவல்கள், அழைப்புகள் மூலமாக நமது வங்கி கணக்கு குறித்த விவரங்களை அறிந்துகொண்டு, பணத்தை திருட முயற்சிப்பார்கள். 

அலட்சியமாக போலி message, calls-ஐ நாம் கையாண்டால் பணத்தை இழந்துவிடுவோம். இதுபோன்ற போலி அழைப்புகள், குறுந்தகவல்களை அடையாளம் காண்பது சிரமமாக உள்ளது. 

1. உங்களுக்கு தெரியாத எண்ணில் இருந்து எச்சரிக்கை மெசேஜ் வந்தால் அது போலியானது என்பதை எளிதாக கண்டறியலாம்.

ஏனெனில், உங்கள் வங்கியில் இருந்து வரும் மெசேஜ்கள் அனைத்தும் VM - ICICI Bank, AD - ICICI BN, JD - ICICIBK என்பதை போல் தான் இருக்கும்.

அதாவது, எந்த வங்கியும் தனிப்பட்ட எண்களில் இருந்து மெசேஜ் அனுப்பாது.

2. உங்களுக்கு வரும் மெசேஜ்களை கவணமாக வாசித்து பாருங்கள். அதில் ஏதாவது பிழை இருந்தால் பதில் அளிக்காதீர்கள்.

ஏனெனில், வங்கியில் இருந்து வரும் குறுந்தகவல்களில் எந்த பிழையும் இருக்காது. பிழை இருந்தால் அது போலியானது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

3. உங்களுக்கு பரிசு கிடைத்துள்ளது எனக் கூறி உங்கள் மொபைல் எண்ணுக்கு மெசேஜ் வந்தால், அதனை பொருட்படுத்த வேண்டாம்.

ஏனெனில் அது நிச்சயம் போலியான மெசேஜ் தான். வங்கியில் இருந்து ஒருபோதும் இலவசமாக பரிசு கொடுக்க மாட்டார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

அதேபோல் இதுபோன்ற மெசேஜ்களில் வரும் Link ஐ ஒருபோதும் Click செய்ய வேண்டாம்.   


 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்