நியூயோர்க்கில் கோர விபத்து... கனேடியர் பலி

8 தை 2024 திங்கள் 09:23 | பார்வைகள் : 8224
நியூயோர்க்கில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒரு கனடியர் உயிரிழந்துள்ளதுடன் சிலர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தில் சிக்கியவர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் கனடியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கனடாவில் மொன்றியாலில் இருந்து பயணம் செய்த பஸ், அமெரிக்காவின் நியூயோர்க்கின் லேக் ஜோர்ஜ் பகுதியில் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 11 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்த பஸ் விபத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்பதுடன் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
6 நாள்கள் முன்னர்
நினைவஞ்சலி

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025